பதுளை பெருந்தோட்ட ஆலயங்களின் உண்டியல்களை உடைத்து பணம் திருடிய மூவர் கைது

By T Yuwaraj

16 Mar, 2022 | 03:04 PM
image

பதுளையை அண்மித்த அட்டாம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இரு பெருந்தோட்ட ஆலயங்களின் உண்டியல்கள் உடைக்கப்பட்டு, பணம் திருடப்பட்ட சம்பவங்கள் நேற்று இரவு (15-03-2022) இடம்பெற்றுள்ளன. 

இத் திருட்டுச் சம்பவங்கள் குறித்து 17, 19, 20 ஆகிய வயதுகளைக் கொண்ட மூன்று பேரை 16-03-2022 இன்று

அட்டாம்பிட்டிய பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஹின்நாராங்கலை பெருந்தோட்டப் பிரிவின் ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு, அங்கிருந்த உண்டியலை உடைத்து, பத்தாயிரம் ரூபா பணம் திருடப்பட்டது.

அடுத்து, எல்லேவலை பெருந்தோட்டப் பிரிவின் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் உண்டியலும் உடைக்கப்பட்டு, அதிலிருந்து ஆறாயிரம் ரூபா பணமும் திருடப்பட்டது.

இத் திருட்டுக்கள் குறித்து, ஆலய நிருவாகத்தினர், அட்டாம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடுகளையடுத்து, அட்டாம்பிட்டிய 50 ஏக்கர் பிரிவு பெருந்தோட்டத்தைச் சேர்ந்த 17, 19, 20 வயதுகளைக் கொண்ட மூன்று பேரை பொலிசார் கைது செய்தனர்.

குறித்த மூவரும் திருட்டுக்களை ஒப்புக் கொண்ட போதிலும், திருடப்பட்ட பணத்தில் ஒரு தொகைப் பணமே மீட்கப்பட்டது. ஏனைய பணத்தை தாம் செலவு செய்துவிட்டதாகவும், வறுமையின் காரணமாகவே, இந்த திருட்டுக்களை மேற்கொண்டதாகவும், கைது செய்யப்பட்ட மூவரும், பொலிசாரிடம் ஒப்புதல் வாக்குமூலங்களை அளித்தனர்.

இம் மூவரும் விசாரணையின் பின்னர், பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென அட்டாம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு கரடியனாற்றில் 16 மாடுகள் கடத்தல்...

2023-01-28 12:13:02
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள வசந்த...

2023-01-28 12:06:00
news-image

தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி சுதந்திரதினத்தன்று யாழிலிருந்து...

2023-01-28 11:38:21
news-image

3 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடமையாக்கப்பட்டன

2023-01-28 11:21:37
news-image

வாழைச்சேனையில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கண்டன...

2023-01-28 11:38:57
news-image

பாதுகாப்பு, செழிப்பினை தொடர்ந்தும் முன்னேற்ற நாங்கள்...

2023-01-28 11:07:07
news-image

மீற்றர் வட்டி விவகாரம் ; மேலும்...

2023-01-28 11:00:53
news-image

தேர்தல் முடியும்வரை புதிய ஆணைக்குழு அமைப்பதை...

2023-01-28 10:49:46
news-image

சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில்...

2023-01-28 10:55:50
news-image

இக்கட்டான நிலைமையில் ஒத்துழைப்பு வழங்கிய இந்திய...

2023-01-28 10:26:02
news-image

யாழில் மூன்று தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்...

2023-01-28 09:49:28
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது தேர்தல்...

2023-01-28 09:41:35