ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைது

By T. Saranya

16 Mar, 2022 | 02:54 PM
image

(செய்திப்பிரிவு)

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொரளை

பொரளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சீவலி வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 29 வயதுடைய பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொட

பேலியகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட துட்டைகைமுனு மாவத்தை பிரதேசத்தில் பொலிசாரினால்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 35 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநூரதபுரம்

அநூரதபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேவநம்பியதிஸ்ஸபுர பிரதேசத்தில் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 6 கிராம் 500 மில்லிகிராம் போதைப்பொருளுடன் 52 வயதுடைய திசாவெள பகுதியை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க

நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 180 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 259,000 பணத்தொகையுடன் 22 மற்றும் 43 வயதுகளுடைய மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குருப்புமுல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 830 மில்லிகிராம் போதைப்பொருளுடன்  26 வயதுடைய பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right