எக்ஸ்போலங்கா யூத் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஜாவா லேன் - கலம்போ எவ் சி

16 Mar, 2022 | 02:12 PM
image

(நெவில் அன்தனி)


கொழும்பில் மிகவும் வெற்றிகரமான கழகங்களாக கருதப்படும்  ஜாவா லேன் மற்றும் கலம்போ எவ் சி கழகங்களின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான எக்ஸ்போலங்கா யூத் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டி சிட்டி லீக் மைதானத்தில் வியாழக்கிழமை 17 ஆம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ளது. 

இப் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.

மிகச் சிறந்த இளம் வீரர்களைக் கொண்ட இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இன்றைய இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வருடப் போட்டியில் ஒரே குழுவில் இடம்பெற்ற இந்த இரண்டு அணிகளும் லீக் சுற்றில் மோதிக்கொண்டபோது கலம்போ எவ் சி இளையோர் அணி 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

எனினும் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று அத் தோல்வியை நிவர்த்தி செய்வதற்கு நடப்பு சம்பியன் ஜாவா லேன் இளையோர் அணி உறுதிபூண்டுள்ளது.

கால் இறுதிப் போட்டியில் மாளிகாவத்தை யூத் இளையோர் அணியை 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கலம்போ எவ்.சி. இளையோர் அணி வெற்றிகொண்டது.

அரை இறுதிப் போட்டியில் மொரகஸ்முல்லை இளையோர் அணியை 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் வீழ்த்தியிருந்தது.

ஆனால், இன்னுமொரு லீக்கைச் சேர்ந்த வீரர்கள் அரை இறுதியில் விளையாடியதாகத் தெரிவித்து இரண்டு அணிகளும் எழுத்துமூல ஆட்சேபங்களை சமர்ப்பித்ததால் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் விரிவான விசாரணைகளின் பின்னர் அரை இறுதிப் போட்டியை மீள நடத்துவதென தீர்மானித்தனர்.

அதேவேளை இரண்டு அணிகளிலிருந்தும் தலா 2 வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மொரகஸ்முல்லை இளையோர் அணிக்கும் கலம்போ எவ்.சி. இளையோர் அணிக்கும் இடையிலான மீள் அரை இறுதிப் போட்டி கோல் எதுவும் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இதனை அடுத்து அமுல்படுத்தப்பட்ட பெனல்டி முறையில் 5 - 4 என  கலம்போ எவ். சி. வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மறுபுறத்தில் சோண்டர் இளையோர் அணியை 2 - 1 என கால் இறுதியிலும் கலம்போ வெட்டரன்ஸ் இளையோர் அணியை அரை இறுதிப் போட்டியில் 7 - 6 என்ற பெனல்டி முறையிலும் ஜாவா லேன் இளையோர் அணி வெற்றிகொண்டிருந்தது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான அரை இறுதிப் போட்டி 90 நிமிடங்களை நிறைவு செய்தபோது 1 - 1 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்திருந்தது.

இதனை அடுத்து அமுல்படுத்தப்பட்ட பெனல்டியிலேயே ஜாவா லேன் இளையோர் அணி வெற்றிபெற்றது.

அரை இறுதிப் போட்டிகளில் பெனல்டி முறைகளில் வெற்றிபெற்ற ஜாவா லேன் மற்றும் கலம்போ எச்.சி. இளையோர் அணிகளுக்கு இடையிலான இன்றைய இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் சம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடவுள்ளதால் இறுதிப் போட்டி மிகுந்த விறுவிறுப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

ஜாவா லேன் இளையோர் அணிக்கு டொனல்ட் டெறிக் பெர்னாண்டோ தலைவராக விளையாடுவதுடன் இவ்வணியில் 3 யாழ். வீரர்கள் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.

கலம்போ எவ்.சி. இளையோர் அணிக்கு நிக்சன் அன்தனி தலைவராக விளையாடுகின்றார்.

இலங்கையில் முன்னணி கழகங்களின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையில் கால்பந்தாட்டப் போட்டியை முதலாவதாக ஏற்பாடு செய்த பெருமை ஆர். புவனேந்திரன் தலைமையிலான சிட்டி புட்போல் லீக்கை சேருகின்றது.

கடந்த வருடம் குறைந்த அளவிலான கழகங்கள் பங்குபற்றிய போதிலும் இந்த வருடம் 18 கழகங்கள் 4 குழுக்களில் விளையாடின.

இவ் வருடம் சம்பியனாகும் அணிக்கு எக்ஸ்போலங்கா யூத் கிண்ணத்துடன் தங்கப் பதக்கங்களும் ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படும். இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு வெள்ளிப்பதக்கங்களுடன் 75,000 ரூபா பணப்பரிசு வழங்கப்படும்.

அத்துடன் அதிசிறந்த வீரர், அதி சிறந்த கோல்காப்பாளர் ஆகியோருக்கான விருதுகளும் வழங்கப்படும்.

அணிகள்

ஜாவா லேன் இளையோர்: 

டொனல்ட் டெறிக் பெர்னாண்டோ (தலைவர்)

எம்.ஐ. இமாதுல்லா

எம்.என். நதீம்

எம். யதுசன்

எஸ். சதுரியன்

உதயகவி 

எம். டிக்சன்

ஆர். கேசிதன்

எம். ஷயிர்

எம்.எப். அப்துல்லா

ரிஷார்ட் அஹமத்

எம். அசாதுல்லா

எப்.ஆர். பரீக்

 எம். ஆத்திப்

எம். முஷ்தாக்

எம். பர்மான்

அப்துல் பாசித்

ஏ. அர்ஹம்

எஸ்இ அப்துல்லா

எம். இப்ராஹிம்

எம். அஸ்கர்

ஆர். ஷெய்புல்லா

ஏ. மாலிக்

எம்.எப். பிலால்

பயிற்றுநர்: அகஸ்டின் ஜோர்ஜ்

கலம்போ எவ்.சி. இளையோர்: 

நிக்சன் அன்தனி (தலைவர்)

கிறிஸ்டோபர் தோர்ஸ்டென்சென்

பவன் சச்சின் விமுக்தி

மொஹமத் லபார்

பாசுர சலஹச

சமுனு தரின்

எம். பித்யான்

எம். இஹ்லாஸ்

எம். பாதில்

எம். காலிக்

சம்பத் விதுரங்க

எம். ஷஹீன்

எம். நிஷாத்

என். அலி

எம். ஹய்ஸாம்

எம். அப்ஷான்

எம்.ஐ. யாசிர்

எம். மனாப்

பயிற்றுநர்: திமித்ரி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07