(எம்.எப்.எம்.பஸீர்)

அரசியல்வாதிகள்,முப்படை அதிகாரிகள் முன்னாள் உயர் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரபுக்களை கைது செய்ய முன்னர் அது குறிந்து ஆராய பாராளுமன்ற உப குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.  

இதற்கான ஆலோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகவும்  எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முன்மொழிவு அல்லது பத்திரம் ஒன்றினை முன்வைக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் தெரிவித்தன.