பாபர் அஸாமின் சதத்துடன் வெற்றியை நோக்கி பாகிஸ்தான் : கடும் சவாலுக்கு மத்தியில் அவுஸ்திரேலியா

Published By: Digital Desk 4

15 Mar, 2022 | 08:51 PM
image

(என்.வீ.ஏ.)

பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் சதம் குவித்ததுடன் ஆரம்ப வீரர் அப்துல்லா ஷபிக்குடன் இணைந்து அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கான முயற்சிக்கு கடும் சவால் விடுத்துள்ளார்.

இந் நிலையில் கடைசி நாள் ஆட்டத்திலும் பாகிஸ்தான் மிகுந்த பொறுமையுடன் துடுப்பெடுத்தாடினால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனைமிகு வெற்றியை பதிவு செய்யக்கூடியதாக இருக்கும்.

எவ்வாறாயினும் கடைசி நாள் ஆட்டத்தின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் விக்கெட்களைத் தக்கவைக்க பாகிஸ்தான் முயற்சிக்கவேண்டிவருவதால் அவ்வணி பலத்த நெருக்கடியை எதிர்கொள்ளும். இதன் காரணமாக அவுஸ்திரேலியா தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்த முயற்சிக்கும். எனவே கடைசி நாள் ஆட்டம் சுவாரஸ்யத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவினால் கடைசி இன்னிங்ஸில் நிர்ணயிக்கப்பட்ட 506

 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான், நான்காம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (15) ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 8 விக்கெட்கள் மீதமிருக்க, கடைசி நாள் ஆட்டத்தில் பாகிஸ்தானின் வெற்றிக்கு இன்னும் 314 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது.

பாகிஸ்தானை முதல் இன்னிங்ஸில் 148 ஓட்டங்களுக்கு சுருட்டிய அவுஸ்திரேலியா, இரண்டாவது இன்னிங்ஸிலும் சாதிக்கலாம் என எண்ணி, நான்காம் நாளன்று முதலாவது ஆட்ட நேர பகுதியில் தனது இரண்டாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

6ஆவது ஓவரில் ஒரு ஓட்டம் பெற்றிருந்த ஆரம்ப வீரர் இமாம்-உல்-ஹக்கின் விக்கெட்டை வீழ்த்திய அவுஸ்திரேலியா, 17 ஓவர்கள் கழித்து 23ஆவது ஓவரில் பாகிஸ்தானின் மொத்த எண்ணிக்கை 21 ஓட்டங்களாக இருந்தபோது அஸார் அலியை (6) ஆட்டமிழக்கச் செய்தது.

டெஸ்ட் போட்டி ஒன்றில் இக்கட்டான வேளையில் எவ்வளவு பொறுமையாக துடுப்பெடுத்தாட வேண்டும் என்பதை பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்க்ள  நிரூபித்தனர்.

பாபர் அஸாம் மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி 197 பந்துகளை எதிர்கொண்டு 102 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். அவர் 12 பவுண்ட்றிகளை அடித்தார்.

ஆரம்ப வீரர் அப்துல்லா ஷிபிக் 4 மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி 226 பந்துகளை எதிர்கொண்டு 71 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

அவர்கள் இருவரும் 238 பந்துகளை (ஏறத்தாழ 60 ஓவர்கள்) எதிர்கொண்டு பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 171 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

போட்டியின் நான்காம் நாள் காலை தனது 2ஆவது இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா இன்றைய 6ஆவது ஓவரில் 2ஆவது விக்கெட்டை இழந்தபோது 92 ஓட்டங்களுடன் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

எண்ணிக்கை சுருக்கம்

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 556 - 9 விக். டிக்ளயார்ட் (உஸ்மான் கவாஜா 160, அலெக்ஸ் கேரி 93, ஸ்டீவன் ஸ்மித் 72, நெதன் லயன் 38, டேவிட் வோர்னர் 36, பெட் கமின்ஸ் 34 ஆ.இ., பாஹீம் அஷ்ரவ் 55 - 2 விக்.)

பாகிஸ்தான் 1ஆவது இன்: 148 (பாபர் அஸாம் 36, நௌமான் அலி 20 ஆ.இ., இமாம்-உல்-ஹக் 20, மிச்செல் ஸ்டார்க் 29 - 3 விக்., மிச்செல் ஸ்வெப்சன் 32 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்: 97 - 2 விக். டிக்ளயார்ட் (உஸ்மான் கவாஜா 44 ஆ.இ., மார்னுஸ் லபுஸ்சானே 44)

பாகிஸ்தான் 2ஆவது இன்: 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 192 - 2 விக். (பாபர் அஸாம் 102 ஆ.இ., அப்துல்லா ஷபிக் 71 ஆ.இ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41
news-image

சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால்...

2024-09-11 00:58:18
news-image

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை...

2024-09-10 19:10:56
news-image

இந்திய டெஸ்ட் குழாத்தில் மீண்டும் ராகுல்,...

2024-09-10 14:11:46