(ரொபட் அன்டனி)

அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளும் பயணத்திற்கான  இறுதி பஸ்ஸில் ஏறுவதற்கு  கிடைத்திருக்கின்ற வாய்ப்பை  இழந்துவிடுவோமா என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.  இந்த  பஸ்ஸை தவறவிட்டால் எம்மால் பயணத்தை மேற்கொள்ள முடியாது போய்விடும்  என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான  டிலான் பெரெரா தெரிவித்தார்.  

முன்னாள் இராணுவ தளபதிகளை  நீதிமன்றத்துக்கு அழைத்துவருவதன் மூலம்      தெற்கில் உள்ள இனவாதிகளுக்கு   தீனிபோடப்படுகின்றது. 

அவற்றை தவிர்க்குமாறு நாங்கள்  கோருகின்றோம்.   அதாவது  தெற்கின் இனவாதிகளுக்கு தீனிபோடும்   செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளக்கூடாது.   மூளையை பாவித்து செயற்படவேண்டியது தற்போதைய நிலையில் மிகவும் அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவின்  அண்மைய உரை  மற்றும் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பாக விபரிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.