நடிகர் வைபவ் நடிக்கும் 'பபூன்' பட டீசர் வெளியீடு (காணொளி இணைப்பு)

Published By: T Yuwaraj

15 Mar, 2022 | 04:46 PM
image

நடிகர் வைபவ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'பபூன்' பட டீஸர் வெளியாகி இருக்கிறது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ' பபூன்'. கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் வைபவ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக 'டிக்கிலோனா' பட புகழ் நடிகை அனகா நடித்திருக்கிறார். 

இவர்களுடன் ஜோஜு ஜார்ஜ், நரேன், ஆடுகளம் ஜெயபாலன், மூணார் ரமேஷ், கிராமிய பாடகர் ஆந்தகுடி இளையராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிடும் இந்த படத்தை, பேஷன் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

மினிமம் கேரன்டி நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் முன்னணி நடிகர் வைபவ் நடித்திருக்கும் 'பபூன்' திரைப்படத்தின் டீசர், இணையவாசிகளை கவர்ந்திருப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உண்டாகியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right