இலங்கை தமிழர் மாணவர்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை தமிழக முதல்வர் வழங்கினார்

15 Mar, 2022 | 01:07 PM
image

தமிழகத்திலுள்ள மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் மாணவ மாணவியர்களின் கல்வி கற்கை பயன்பாட்டிற்காக வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கிவரும் மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் மாணவ செல்வங்கள் கல்வி கற்றலில், இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டும், தொடர்ந்து கல்வி கற்பதில் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், கல்லூரி மற்றும் பட்டய படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசால் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் முதல் வகுப்பு முதல் 'ஏ' நிலை வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்வி அரசாங்க அனுசரணையுடன் செயல்படும் பாடசாலைகளில் வழங்கப்பட்டு வருகிறது. 

இவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று காரணமாக கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட்டது. 

இந்த மாணவ செல்வங்களுக்கு மெய் நிகர் வகுப்பறை வசதி இல்லாத காரணத்தால் தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் கல்வி தொலைக்காட்சி மூலம் நேரடி வகுப்புகளால் பயனடைவதில் சிரமம் இருந்தது.

இவர்களுக்கான கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கல்வி தொலைக்காட்சி அலைவரிசையை பார்த்து பயன் அடையும் வகையில் அவர்களுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை தமிழக அரசு வழங்கியது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மறுவாழ்வு முகாம்களில் வாழும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 109 வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை  ரோட்டரி இன்டர்நேஷனல் சங்கத்தினர் வழங்கினர். 

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் நிகழ்வில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பங்குபற்றி, மூன்று வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். 

இந்நிகழ்வின் போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் உடனிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"தெற்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம்: 'அமெரிக்காவிற்கே முதலிடம்'...

2026-02-13 14:26:43
news-image

இம்ரான் கானின் வலது கண்ணில் 85...

2026-02-13 12:24:39
news-image

சீனாவின் மீன்பிடி படகை கைப்பற்றியது ஜப்பான் 

2026-02-13 12:42:27
news-image

திடீரென வீதி உள்வாங்கப்பட்டதால் பாரிய பள்ளம்!...

2026-02-13 11:39:38
news-image

ரஷ்ய வான்வழித் தாக்குதலால் உக்ரேனில் மின்சார...

2026-02-13 11:20:19
news-image

16 வயதிற்குட்பட்டோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த...

2026-02-13 10:44:56
news-image

பங்களாதேஷ் தேர்தலை இரத்து செய்ய வேண்டும்...

2026-02-13 10:21:02
news-image

பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு...

2026-02-13 09:39:14
news-image

டாசன்ஸ் க்ரீக் நட்சத்திரம் ஜேம்ஸ் வான்...

2026-02-12 16:07:54
news-image

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

2026-02-12 15:18:01
news-image

இந்தியா - பாகிஸ்தான் போரில் 10...

2026-02-12 13:55:34
news-image

பங்களாதேஷ் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய...

2026-02-12 12:46:56