logo

உலகநாயகன் கமல்ஹாசனின் 'விக்ரம்' வெளியீட்டு திகதி அறிவிப்பு

15 Mar, 2022 | 12:19 PM
image

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் தயாராகிவரும் 'விக்ரம்' படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'விக்ரம்'.

இதில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் கதையின் நாயகனாக  நடித்திருக்கிறார், அவருடன் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், சம்பத்ராம், ஹரிஷ் பராடி, நடிகைகள் காயத்ரி, ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, 'கருத்தம்மா' புகழ் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு அனிரூத் ரவிச்சந்தர் இசை அமைக்கிறார்.

Master Movie Grand Release Function Stills

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் உலக நாயகன் கமலஹாசன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது.

இதனை தொடர்ந்து இப்படத்தின் வெளியீட்டு திகதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் விளம்பர காணொளியில் உலகநாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பல நடிகர்களுடன், படக்குழுவினரும் தோன்றி இருப்பதால் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் அளித்திருக்கிறது.

'விஸ்வரூபம்' இரண்டாம் பாகத்திற்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 'விக்ரம்' வெளியாவதால் அவரது ரசிகர்கள் பட வெளியீட்டு விவரங்களை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யோகி பாபு நடிக்கும் 'தூக்குதுரை' படத்தின்...

2023-06-09 19:49:07
news-image

பகத் பாசிலின் 'தூமம்' படத்தின் முன்னோட்டம்...

2023-06-09 19:48:44
news-image

நடிகர் ஷபீர் நடிக்கும் 'பர்த்மார்க் '...

2023-06-09 19:48:21
news-image

பான் இந்திய படைப்பாக தயாராகும் 'ஆரா'

2023-06-09 19:45:28
news-image

போர் தொழில்- விமர்சனம்

2023-06-09 19:44:58
news-image

நடிகை ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் 'தருணம்'...

2023-06-08 15:56:59
news-image

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'எல் ஜி...

2023-06-08 15:23:39
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'இறைவன்' படத்தின்...

2023-06-08 15:17:13
news-image

'அஸ்வின்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

2023-06-07 21:33:24
news-image

கிஷோர் நடித்திருக்கும் 'முகை' படத்தின் முன்னோட்டம்...

2023-06-07 21:32:40
news-image

பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் பிரத்யேக...

2023-06-07 21:28:34
news-image

பூஜையுடன் தொடங்கிய விக்ரம் பிரபுவின் புதிய...

2023-06-07 21:28:14