ஒமிக்ரோன்  தாக்கத்தால் சீனாவில் கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இதனால் சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியது. 

நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,393 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், சீனாவில் நேற்று புதிதாக 5,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

2 ஆண்டாக கொரோனா தாக்கம் இல்லாத நிலையில், கடந்த சில தினங்களாக நோய் பாதிப்பு அதிகரித்து வருவது அந்நாட்டினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.