(எம்.எம்.சில்வெஸ்டர்)
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் 19 கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத் தொகையை வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி 'ஏ 1' பிரிவில் டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரட்ண, வனிந்து ஹசரங்க, துஷ்மன்த்த சமீர, தனஞ்சய டி சில்வா ஆகிய நான்கு வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த ஒப்பந்தத்தில் , 'ஏ 1' பிரிவில் இடம்பெறுவோருக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளதாகவும், 80 ஆயிரம் அமெரிக்க டொலர் வழங்கப்படும் 'ஏ 2' பிரிவில் எந்தவொரு வீரரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை எனவும் அறியக்கிடைக்கின்றது.
சிரேஷ்ட வீரர்களான எஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால், லஹிரு திரிமான்ன, மட்டுப்படுத்தப்ட்ட ஓவர்கள் கொண்ட அணிகளின் தலைவரான தசுன் ஷானக்க, குசல் பெரேரா, பெத்தும் நிஸ்ஸங்க ஆகிய 6 பேரும் 65 ஆயிரம் அமெரிக்க டொலர் வழங்கப்படும் 'பீ1' பிரிவுக்கு உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சரித் அசலங்க, லசித் எம்புல்தெனிய, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் 55 ஆயிரம் டொலர் அடங்கிய 'பீ2' பிரிவுக்கு உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, 45 ஆயிரம் அமெரிக்க டொலர் கொண்ட 'சீ 1' பிரிவுக்கு விஷ்வ பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோவும், 35 ஆயிரம் அமெரிக்க டொலர் கொண்ட 'சீ 2' பிரிவுக்கு சாமிக்க கருணாரட்ண, நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களைத் தவிரவும் மேலும் 10 வீரர்கள் வருடாந்த ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, லக்சான் சந்தகான், மஹீஷ் தீக்சன, லஹிரு குமார ஆகியோர் 30 ஆயிரம் அமெரிக்க டொலருக்கும், பானுக்க ராஜபக்ச 25 ஆயிரம் அமெரிக்க டொலருக்கும் நுவன் பிரதீப், பிரவீன் ஜயவிக்ரம இருவரும் 20 ஆயிரம் அமெரிக்க டொலருக்கும் ஓஷத பெர்னாண்டோ,கமிந்து மெண்டிஸ், மனோத் பானுக்க, பினுர பெர்னாண்டோ 15 ஆயிரம் அமெரிக்க டொலருக்கும் இணைத்துக்கொள்ளப்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஒப்பந்தில் இணைக்கப்பட்டிருந்த அக்கில தனஞ்ச மற்றும் அஷேன் பண்டார ஆகிய இருவரையும் இம்முறை ஒப்பந்த்திலிருந்து அகற்றிவிடப்படுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM