தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீளாய்விற்கான இறுதித் திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 4

14 Mar, 2022 | 09:41 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி இடம்பெற்றது. பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் 85ஆயிரத்தி 446 மாணவர்களும் சிங்கள மொழி மூலம் 2இலட்சத்தி 55 ஆயிரத்தி 62 மாணவர்களுமாக மொத்தம் 340508 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

Articles Tagged Under: புலமைப் பரிசில் | Virakesari.lk

இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

அதன் பிரகாரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, மாத்தறை, குருணாகல், காலி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு 149 புள்ளிகள் வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில்  சிங்கள மொழி மூலமான பாடசாலைகளுக்கு 152 வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் 148 புள்ளிகள் வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு 147 புள்ளிகள் வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலியா, புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு 146 வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இரத்தினபுரி மாவட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு 145 புள்ளிகள் வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகின. அதற்கமைய பரீட்சைகள் திணைக்களத்தின் WWW.DOENETS.LK என்ற இணையத்தளத்தின் ஊடாக பரீட்சையின் பெறுபேறுகளை காண முடியும்.

இதேவேளை, பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான மேன்முறையீடுகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கும்...

2025-02-16 09:48:30
news-image

புதன்கிழமை இலங்கை வரும் இன விவகாரங்களுக்கான...

2025-02-16 09:42:59
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது கடினம்...

2025-02-16 09:22:20
news-image

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் விரைவில் மீட்கப்படுவர்...

2025-02-16 09:13:12
news-image

அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்...

2025-02-16 09:11:44
news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை...

2025-02-15 17:53:42
news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த...

2025-02-15 17:54:48
news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44