பொகவந்தலாவையில் கிணற்றிலிருந்து மாணவன் ஒருவனின் சடலம் மீட்பு 

Published By: Digital Desk 4

14 Mar, 2022 | 02:02 PM
image

பொகவந்தலாவை − செல்வகத்தை பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து பாடசாலை மாணவன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவனின் சடலமே இவ்வாறு  கண்டெடுக்கப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொகவந்தலாவை − செல்வகந்தை பகுதியைச் சேர்ந்த 18 வயதான பாரதிதர்ஷன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொகவந்தலாவை − சென்மேரீஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்று போட்டியினை கண்டு களித்து விட்டு வீடு திரும்பிய நிலையில், குறித்த மாணவன் காணாமல் போயுள்ளார்.

மாணவனை நீண்ட நேரம் காணவில்லை என உறவினர்கள் தேடிய நிலையில், குறித்த மாணவனின் சடலம் கிணறொன்றில் இருப்பதை உறவினர்கள் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து சடலம் மீட்கப்பட்டு பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கர்நாடகாவில் முத்தையா முரளிதரன் ரூ.1400 கோடி...

2024-06-22 00:34:31
news-image

பொசன் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண...

2024-06-22 00:19:19
news-image

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன்...

2024-06-22 00:12:34
news-image

யாழில் 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச...

2024-06-22 00:01:03
news-image

மன்னார் முருங்கன் பகுதியில் கோர விபத்து...

2024-06-21 23:56:18
news-image

வைத்தியசாலை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

2024-06-21 23:51:14
news-image

வங்குராேத்திலிருந்து நாடடை மீட்க அரசாங்கம் அனைத்து...

2024-06-21 21:45:12
news-image

ஜனாதிபதியின் மன்னார் விஜயம் குறித்து மீனவர்கள்...

2024-06-21 21:44:00
news-image

நீண்ட நாட்களுக்கு பழுதடையாத செமன் பக்கற்...

2024-06-21 21:40:13
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவர்...

2024-06-21 21:36:48
news-image

போதைப்பொருட்களுடன் 693 பேர் கைது !

2024-06-21 21:37:38
news-image

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான திறன் மேம்பாட்டு...

2024-06-21 21:38:56