பாலமுனையில் பௌத்த விகாரை மீண்டும் வெடிக்கும் சர்ச்சை

14 Mar, 2022 | 01:44 PM
image

(எம்.எஸ்.தீன்) 

'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதை ஜனநாயக செயற்பாடாக காட்டிக் கொண்டாலும், அதன் பின்னணியில் பௌத்த மேலாதிக்கவாதிகள் சிறுபான்மையினரின் மதம் மற்றும் கலாசார உரிமைகளை மறுப்பதற்கானதொரு கருவியாகவே கையாள்வதற்கு முனைந்து கொண்டிருக்கின்றார்கள்.

நாட்டில் பல இடங்களில் பௌத்த கடும்வாக்குவாத தேரர்களின் தலைமையில் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்பட்ட சம்பங்கள் பல உள்ளன.

அத்தகையதொரு சம்பவம் கடந்த 09ஆம் திகதி அம்பாரை மாவட்டத்தில்ரூபவ் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் இடம்பெற்றது.

தீகவாவி ரஜமகா விகாரையின் விகாராதிபதி தலைமையில் ஒரு சில பௌத்த தேரர்களும், இன்னும் சிலருமாக பாலமுனை முள்ளிமலை குளப்பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் குறித்த தினமன்று காலையில் விகாரை ஒன்றினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பாலமுனை பிரதேசத்தில் எந்தவொரு பௌத்தரும் இல்லாத நிலையில், தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் சட்டத்திற்கு முரணாக பௌத்த விகாரை அமைப்பதற்குரிய ஆரம்ப வேலைகளை முன்னெடுப்பதற்கு எடுத்த முயற்சியானது இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு எடுக்கப்பட்டதொரு செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.

குறித்த இடம் தனியாருக்கு சொந்தமானது மட்டுமன்றி அங்கு விகாரை அமைப்பதற்குரிய எந்தவொரு அனுமதியையும் அட்டாளைச்சேனை பிரதேச சபையிடம் பெற்றுக் கொள்ளவில்லை என்று தவிசாளர் ஏ.எல்.அமானுல்லாஹ் அவ்விடத்தில் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.

மேலும், அட்டாளைசேனை பிரதேச செயலாளருக்கு கூட அறிவிக்காத நிலையிலும் இவர்கள் செயற்பட்டுள்ளார்கள்.

இதன் மூலமாக அவர்கள் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்பட்டுள்ளார்கள் இவ்வாறு சட்டத்தை கையில் எடுத்துச் செயற்பட்டவர்களுக்கு சிவில் உடையில் வந்த பொலிஸார் பாதுகாப்பு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பௌத்த தேரர்களும், சிலரும் மேற்கொண்ட அடாத்தான நடவடிக்கைக்கு எதிராக பாலமனை பொது மக்கள் தமது எதிhப்பை காட்டினர்.

மேலும் அங்கு வருகை தந்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லாஹ், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எம்.அன்ஸில் உள்ளிட்டவர்கள் பௌத்த தேரர்களுடன் சுமூகமாக பேச்சுக்களை முன்னெடுத்தனர்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-13#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடியின் விஜயத்தைத் தொடர்ந்து அநுராதபுரத்துக்கு கிடைக்கவுள்ள...

2025-04-17 18:34:46
news-image

எல்லையின் பேய்கள்: பிள்ளையானின் வன்முறை மரபையும்...

2025-04-17 12:21:24
news-image

பிள்ளையான் கைது, 2019 ஈஸ்டர் ஞாயிறு...

2025-04-17 04:01:32
news-image

தேசிய மற்றும் மனித பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான...

2025-04-16 21:55:19
news-image

டொனால்ட் ட்ரம்ப் மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக...

2025-04-16 17:26:09
news-image

மூச்சுவிட வாய்ப்பளித்த ட்ரம்ப்; முடிவுக்கு வரும்...

2025-04-16 02:02:55
news-image

பொருளாதார வளர்ச்சிக்காக ஜ.எஸ்.பி . பிளஸ்...

2025-04-15 22:07:17
news-image

நக்சிவான்: நிலத் தொடர்பற்ற சுயாட்சிக் குடியரசு

2025-04-12 16:57:40
news-image

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின்...

2025-04-12 16:58:30
news-image

இந்தியாவின் காலடியில் விழுந்துள்ளதா இலங்கை?

2025-04-12 17:05:16
news-image

அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

2025-04-12 16:54:29
news-image

அமெரிக்க - சீன வர்த்தகப் போர்

2025-04-12 16:59:30