முகநூல் ஊடாக ஏற்பாடு செய்த களியாட்டத்தில் 39 இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது

Published By: Digital Desk 4

14 Mar, 2022 | 01:00 PM
image

புத்தளம் - வென்னப்புவ பகுதியில் முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்டத்தில் ஈடுபட்டிருந்த 39 இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Articles Tagged Under: களியாட்டம் | Virakesari.lk

வென்னபுவ பொலிஸ் பிரிவில் வயிக்கால பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் இவ்வாறு போதைப்பொருள் பாவனையுடன் களியாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமையவே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 - 30 வயதுக்கு இடைப்பட்ட மட்டக்குளி, கனேமுல்ல, நீர்கொழும்பு, அநுராதபுரம், வத்தளை மற்றும் மீரிகம உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 2 கிராம் 110 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 5 கிராம் ஹசீஸ் போதைப்பொருள், 27 கிராம் கஞ்சா மற்றும் 15 மதுபான போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து , நாளைமறுதினம் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டு சிகரட்டுகள், மதுபான போத்தல்களுடன் இந்திய...

2025-03-24 16:58:37
news-image

யாழில் வீடொன்றில் திருடி மதுபானம் வாங்கிய...

2025-03-24 16:42:32
news-image

இந்திய இராணுவத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட...

2025-03-24 16:34:24
news-image

யாழ். சுழிபுரத்தில் கசிப்பு விற்றவர் கைது

2025-03-24 16:39:03
news-image

சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்திலிருந்து இரு...

2025-03-24 16:33:15
news-image

மட்டக்களப்பு - கொழும்புக்கு இடையிலான ரயில்...

2025-03-24 16:24:17
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் ;...

2025-03-24 16:18:26
news-image

தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை திறந்துவைத்த வட...

2025-03-24 16:06:47
news-image

இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய...

2025-03-24 15:44:19
news-image

மேர்வின் சில்வா உட்பட மூவரின் விளக்கமறியல்...

2025-03-24 15:45:50
news-image

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன...

2025-03-24 15:41:21
news-image

மன்னார் பெண் தொழில்முனைவோருக்கு ஜப்பான் மற்றும் ...

2025-03-24 15:10:30