(செய்திப்பிரிவு)
சமூகவலைத்தளங்களில் உலாவரும் 'அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய பொலிஸ் தலைமையகத்தின் செய்தி' என்ற தகவல் உண்மைக்கு புறம்பானதாகும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேற்கூறப்பட்ட தலைப்பில் பொருளாதார நெருக்கடி உட்பட 22 விடயங்களை உள்ளடக்கிய இவ்வாறானதொரு செய்தியை ஊடகங்கள் வாயிலாகவும் அல்லது வேறு எந்தவொரு வகையிலும் பொலிஸாரால் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லையென பொலிஸ் தலைமையகம் தெரிவித்ததுடன் இவ்வாறான போலியான செய்திகள் பொலிஸாருக்கு அவப்பெயரை உண்டாக்குகின்றன எனவும் குறிப்பிடுள்ளது .
மேலும் இலங்கை பொலிஸாரினால் பொதுமக்களுக்கு அறிவிக்கவேண்டிய விடயங்கள் ஏதேனும் இருப்பின் பொலிஸ் ஊடகப்பிரிவினூடாக பொதுமக்களுக்கு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதுபோன்ற போலிசெய்திகளை நம்பி ஏமாறவேண்டாமென பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளடதுடன் மேற்குறிப்பிட்ட போலியான செய்தியை வெளியிட்டமை யார் என்பது குறித்து விசாரணை நடாத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM