உக்ரேன் - ரஷ்யா இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

14 Mar, 2022 | 10:18 AM
image

உக்ரேன் மீதான போர் 18 ஆவது நாளாக நீடித்த நிலையில், ரஷ்ய படைகளின் தாக்குதல்களில் உக்ரேன் நகரங்கள் தீப்பற்றி எரிந்து வருகின்றன.

உக்ரேன் போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக்கொண்டிக்கும் அதேவேளையில் ரஷ்யா படைகள் நாளுக்கு நாள் தாக்குதலின் வேகத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.

Negotiations between Russia and Ukraine are set to resume on Monday as the war rages. Today was day 18 of the war that began when Russian forces invaded Ukraine on February 24 in what the Kremlin calls a special military operation. Pictured: Previous negotiations between the two sides on March 7

இதனால் உக்ரேன் நகரங்கள் பற்றி எரிந்து வருகின்றன.

உக்ரேனில் பாதுகாப்பான இடம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த நாட்டின் அனைத்து நகரங்கள் மீதும் ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல்களை தொடுத்து வருகின்றன.

வான்வழியாக ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வரும் அதே வேளையில், தரை வழியாகவும் ரஷ்ய படைகள் உக்ரேன் நகரங்களுக்குள் முன்னேறி வருகின்றன.

இதனிடையே உக்ரேன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் இறங்கியுள்ளார்.

Naftali Bennett, Israel's new prime minister, unlikely to change stance on  Iran nuclear deal | World News - Hindustan Times

இது தொடர்பாக அவர் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது,

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் புதினை நேரில் சந்தித்து பேச தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

ஏற்கனவே இதேபோன்று நேரடி பேச்சுவார்த்தைகளுக்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளை புடின் நிராகரித்துவிட்ட நிலையில் ஜெலன்ஸ்கியின் இந்த அறிவிப்பை அவர் ஏற்பாரா என்ற கேள்வி இருந்து வந்தது.

இந்த நிலையில் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்திக்க தான் விரும்பவில்லை என புடின் தெரிவித்தார்.

துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது இதனை அவர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் உக்ரேன்-ரஷ்யா இடையிலான அதிகாரிகள் மட்டத்திலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்கும் என உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் மூத்த ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்திருந்தார்.

'We will not concede in principle on any positions. Russia now understands this. Russia is already beginning to talk constructively,' Ukrainian negotiator and presidential adviser Mykhailo Podolyak (pictured) said in a video posted online

இந்நிலையில் உக்ரேன் - ரஷ்யா இடையே இன்று காணொளி காட்சியின் வாயிலாக மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ரஷ்யா-உக்ரேன் பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமை இடம்பெறும் என்று உக்ரேனிய தூதுக்குழுவை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இரண்டு வாரங்களுக்கும் மேலாக ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகளுக்கு இடையே நடந்த நேரடிச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தையில் முன்னேறி வருவதாக இரு தரப்பும் கூறியதை அடுத்து அடுத்த சுற்று பேச்சு வார்த்தை உறுதியாகி உள்ளது.

First responders are seen cleaning up a building recently destroyed by Russian rockets in Kharkiv, Ukraine on March 13

முன்னதாக ரஷ்யாவின் பேச்சுவார்த்தைக் குழுவின் மூத்த உறுப்பினரான லியோனிட் ஸ்லட்ஸ்கி, அண்டை நாடான பெலாரசின் எல்லையில் நடத்தப்பட்ட பல சுற்று பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right