(எஸ்.என்.நிபோஜன்)

மலையக மக்களின் உரிமைக்காகக் கைகொடுப்போம் எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் இன்று மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்ற இப்பொதுக்கூட்டத்தில், அருட்தந்தை செல்வம் மற்றும் அருட்தந்தை ஜோசுவா, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் ப.அரியரட்ணம், தமிழர் விடுதலைக்கூட்டணி செயலாளர் சங்கையா, மேனாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் நா.வை.குகராசா, கிளிநொச்சி மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர் ஜெயக்குமார் கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள், கந்து கொண்டு மலையக உறவுகளின் சம்பள உயர்வு கோரிக்கையினை அரசாங்கம் ஏற்று நிறைவேற்ற வேண்டும் என்று கருத்துரைகளை வழங்கினர்.

இந்த பொதுக்கூட்டத்திற்கு கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள், வர்த்தகர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.