(எம்.மனோசித்ரா)
உள்நாட்டில் தயாரிக்கப்படும் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற சீமெந்தின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து பக்கட் ஒன்றின் விலை இன்று முதல் அமுலாகும் வகையில் 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 50 கிலோ கிராம் சீமெந்தின் விலை 1850 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் கடந்த ஓரிரு வாரங்களாக அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகளும் சடுதியாக அதிகரித்து வருகின்றன.
கடந்த வாரத்தில் மாத்திரம் எரிபொருள், கோதுமை மா, பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகள், உணவுபொதி, கொத்துரொட்டி, மருந்துகள், விமான பயண கட்டணம், கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
இவ்வாறான விலை அதிகரிப்புக்களுக்கு மத்தியில் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் போக்குவரத்து கட்டணமும் அதிகரித்துள்ளது.
அத்தோடு மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பால்மா மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றின் விலைகளும் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் விலைகள் அதிகரிக்கப்பட்டாலும் , தட்டுப்பாடின்றி அத்தியாவசிய பொருட்களையோ அல்லது சேவையையோ இன்னும் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையே நாட்டில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM