கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விமானப்படை முகாமில் பணியாற்றிய விமானப்படை வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

குறித்த விமானப்படை வீரர் நேற்றிரவு தனது துப்பாக்கியால் தம் மார்பில் சுட்டு தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளார். பலத்த காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தில் 22 வயதுடைய விமானப்படை வீரர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த விமானப்படை வீரர் தற்கொலை செய்து கொண்டமையிற்கான காரணங்கள் இதுவரையில் அறியப்படவில்லை.