வடக்கில் 1000 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணிகள் இந்திய உயர்ஸ்தானிகரால் ஆரம்பிப்பு

By T Yuwaraj

13 Mar, 2022 | 05:34 PM
image

(எம்.மனோசித்ரா)

வடமாகாணத்திலுள்ள ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை வழங்கும் செயற்திட்டம் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

நட்பு ரீதியாகவும் மனிதாபிமான அடிப்படையிலும் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் இப்பணி எதிர்வரும் நாட்களில் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் இணைந்து கொண்டாடுவதற்கு ஆதரவளித்தமைக்காக தலைமைத்துவம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும், மீன்பிடித்துறை அமைச்சருக்கும் உயர்ஸ்தானிகர் இதன் போது நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவ உறவில் பாரம்பரியத்தின் விசேட முக்கியத்துவம் தொடர்பாகவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right