உலகில் முதன் முறையாக 24 மணி நேரமும் இலவசமாக மது வழங்கும் சேவையொன்று இத்தாலியில் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகளவில் வையின் மது உற்பத்தி செய்வதில் இத்தாலி இரண்டாம் இடம் வகித்து வருகின்றது.மேலும், இத்தாலி நாட்டில் ஒவ்வொரு வருடமும் பல நாடுகளை சேர்ந்த சுற்றூலா பயணிகள் வருவது வாடிக்கையாகவுள்ளது.

குறிப்பாக, அப்ருஸ்ஸோ மாகாணத்தில் உள்ள சால்டரி டி ஓர்டோனா என்ற நகருக்கு இலட்சக்கணக்கான சுற்றூலா பயணிகள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே, சுற்றுலா பயணிகளை அன்புடன் வரவேற்று உபசரிக்கும் வகையில் இப்பகுதியில் போன்டனா டெல் வினோ என்ற வையின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

குறித்த வையின் நிலையத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு நீரூற்றில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல் இந்த வையின் ஊற்றில் இருந்து 24 மணி நேரமும் வையின் வந்துக்கொண்டு இருக்கும்.

 

இவ்வழியாக செல்லும் சுற்றூலா பயணிகள் எவ்வித கட்டணமும் அனுமதியும் இன்றி எந்த நேரத்திலும் தரமான குறித்த வையினை சேமித்து அருந்தலாம்.இந்த வையின் ஊற்றை சுற்றூலா பயணிகளின் நன்மைக்காக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அமைத்து நடத்தி வருகின்றது.

எனினும், கட்டுப்பாடின்றி அளவுக்கதிகமாக மது அருந்துபவர்களுக்கும், எந்நேரமும் மதுவில் மூழ்கியுள்ள நபர்களுக்கும் இங்கு வையின் வழங்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.