(என்.வீ.ஏ.)

ஹெமில்டன் சிடொன் பார்க் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 155 ஓட்டங்களால் இந்தியா மிக இலகுவாக வெற்றிபெற்றது.

Smriti Mandhana shared her Player of the Match trophy with fellow centurion Harmanpreet Kaur, India vs West Indies, Women's World Cup 2022, Hamilton, March 12, 2022

ஆரம்ப வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தானா, ஹார்மன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் குவித்த சதங்கள் இந்தியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

Hayley Matthews was out to tamely after a strong start, West Indies vs India, Women's World Cup 2022, Hamilton, March 12, 2022

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 317 ஓட்டங்களைக் குவித்தது.

நிதானமாகத் துடுப்பெடுத்தாடிய இந்தியா 14ஆவது ஓவரில் 3ஆவது விக்கெட்டை இழந்தபோது 78 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

The Indian players celebrate after Kycia Knight's fall, India vs West Indies, Women's World Cup 2022, Hamilton, March 12, 2022

யஸ்திகா பாட்டியா (31), அணித் தலைவி மிதாலி ராஜ் (05), தீப்தி ஷர்மா (15) ஆகியோரே ஆட்டம் இழந்த மூவராவார்.

இந் நிலையில் ஜோடி சேர்ந்த அனுபவசாலிகளான ஸ்ம்ரித்தி மாந்தானா, ஹார்மன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்ததுடன்  4ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 184 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தயாவைப் பலப்படுத்தினர்.

Meghna Singh celebrates the wicket of Kycia Knight, West Indies vs India, Women's World Cup 2022, Hamilton, March 12, 2022

119 பந்துகளை எதிர்கொண்ட மந்தானா 13 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 123 ஓட்டங்களையும் ஹார்மன்ப்ரீத் கோர் 107 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்களுடன் 109 ஓட்டங்ளையும்  குவித்த னர்.

வேறு எவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

Hayley Matthews and Deandra Dottin added first century-run opening stand for West Indies in World Cups, West Indies vs India, Women's World Cup 2022, Hamilton, March 12, 2022

மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் அனிசா மொஹம்மத் மாத்திரம் ஓரளவு திறமையாக பந்துவீசி 59 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

318 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 40.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

Jhulan Goswami in action, West Indies vs India, Women's World Cup 2022, Hamilton, March 12, 2022

ஆரம்ப வீராங்கனைகளாக டியேந்த்தரா டொட்டின் (62), ஹேலி மெத்யூஸ் (43) ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 74 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளை நல்ல நிலையில் இட்டனர்.

Smriti Mandhana scored an impressive century, West Indies vs India, Women's World Cup 2022, Hamilton, March 12, 2022

ஆனால், மேற்கிந்தியத் தீவுகளின் ஏனைய வீராங்கனைகள் பிராகாசிக்காததால் 10 விக்கெட்கள் வெறும் 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் விழ, இந்தியா இலகுவாக வெற்றிபெற்றது.

Harmanpreet Kaur pulls one through square leg, West Indies vs India, Women's World Cup 2022, Hamilton, March 12, 2022

இந்திய பந்துவீச்சில் ஸ்நேஹ் ரானா 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெக்னா சிங் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Harmanpreet Kaur goes on the back foot to play the cut, West Indies vs India, Women's World Cup 2022, Hamilton, March 12, 2022

இப் போட்டி முடிவை அடுத்து 8 அணிகள் பங்குபற்றும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் புள்ளிகள் நிலையில் நிகர ஓட்ட வேகம் அடிப்படையில் இந்திய மகளிர் அணி முதலாம் இடத்தை அடைந்துள்ளது.