பாணை உண்ண முடியாத நிலையில் சாதாரண மக்கள் : அரசாங்கம் ஆட்சியை கைவிட்டுச் செல்ல வேண்டும் - நளின் பண்டார

12 Mar, 2022 | 05:59 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு இல்லாமையால் ஒட்டுமொத்த நாடும் செயலிழந்துள்ளது. இந்நிலையில் நாட்டை தொடர்ந்து கொண்டுசெல்ல அரசாங்கத்துக்கு  முடியாது. அதனால் அரசாங்கம் ஆட்சியை கைவிட்டுச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற காணி அபிவிருத்தி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்கும்போது, எரிபொருள் விநியோகம் தொடர்பாக இந்தியாவின் ஆதிக்கம் எமது நாட்டில் அதிகரிக்கும் என நாங்கள் அன்று தெரிவித்தோம். 

தற்போது லங்கா ஐ. ஓ.சி, எமது நாட்டின் வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவகையில் எரிபொருளை அதிகரித்திருக்கின்றது. 

இன்னும் சில தினங்களில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருளும் அதே அளவில் விலை அதிகரிக்கும். 

சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை, அத்துடன் டொலரின் பெறுமதி அதிகத்துள்ளதால் இறக்குமதி பொருட்களின் விலை அதிகரித்து செல்கின்றது. 

கோதுமை மாவின் விலை 40 ரூபாவரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது, இதன் காரணமாக பாண் உட்பட பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

பாண் ஒரு இராத்தல் 120 ரூபா வரை அதிகரிக்கும் நிலையே இருக்கின்றது. 

இன்று சாதாரண மக்கள் காலை மற்றும் இரவு உணவுக்காக பாண் எடுப்பது வழக்கம் தற்போதுள்ள நிலையில் அவர்களுக்கு பாண் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அதேபோன்று நாட்டில் எரிபொருள், காஸ், பால்மா போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இருப்பதால் அதனை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் இருந்து வருகின்றனர். 

வரிசையில் இருக்கும் மக்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இந்நிலையில் கோத்தாபய ராஜபக்ஷ் ஜனாதிபதிக்கு நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியாது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இனவாதத்தை பரப்பி மக்களை ஏமாற்றியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. 

நாட்டை கொண்டுசெல்ல கோத்தாபய ராஜபக்ஷ், பசில் ராஜபக்ஷ்வுக்கு எந்த வேலைத்திட்டமும் இல்லை. இவர்களால் முடியாது என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர். 

அதனால் அரசாங்கம் மேலும் நாட்டை செயலிழக்கச்செய்யாமல் ஆட்சியை கைவிட்டுச் செல்ல வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொருளாதார மீட்சிக்கு தடையான போராட்டங்களுக்கு ஒருபோதும்...

2023-03-23 16:28:25
news-image

தேர்தலுக்கு தேவையான பணத்தை ஏன் வழங்காமல்...

2023-03-23 16:24:26
news-image

பாரிய கடன்களை மீள செலுத்தவே நிறுவனங்களை...

2023-03-23 16:08:45
news-image

அரசதுறை வியாபாரத்தில் ஈடுபட்டதால் மகாவலி போன்ற...

2023-03-23 16:06:04
news-image

அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவுக்கு நிலையான...

2023-03-23 16:00:04
news-image

மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் தலைவராக ஜனாதிபதி...

2023-03-23 15:16:05
news-image

காசநோய் இனம்காணப்படாத பலர் பொதுவெளியில்....! வைத்தியர்...

2023-03-23 16:52:20
news-image

கால வரையறையின்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை...

2023-03-23 17:24:22
news-image

20 இலட்சம் முட்டைகள் இறக்குமதி :...

2023-03-23 16:37:54
news-image

7,500 ரூபாவாக குறைவடையும் 50 கிலோ...

2023-03-23 16:49:28
news-image

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைக் கோரும்...

2023-03-23 16:35:52
news-image

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு...

2023-03-23 16:41:51