(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் படகில் வைத்து கடத்தமுற்பட்ட 105 கிலோகிராம் கஞ்சாவை காங்கேசன்துறை விசேட போதைப்பொருள் ஒழிப்பு  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது சந்தேகத்தின் போரில் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யபட்டவர்களில் ஒருவர் மாதகல் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய இருவரும் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.ஏ.ஏ.ரஞ்சித் மாசிங்க, இளவாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.ஆர். சேனாநாயக்க மற்றும் காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டி.கே. பிரியந்த ஆகியோரின் வழிநடத்தலில் காங்கேசன்துறை விசேட போதையொழிப்பு பொலிஸாரினால் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடியே 45 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாவென தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.