ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் 'பயணி'

12 Mar, 2022 | 08:50 PM
image

நடிகர் தனுஷின் மனைவியும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகி வரும் வீடியோ இசை அல்பத்திற்கு 'பயணி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்று பாதிப்புக்குப் பிறகு இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 'பயணி' என்ற பெயரில் வீடியோ இசை அல்பத்தை இயக்கி வருகிறார். 

இசையமைப்பாளர் அனிருத் பாடி, இசையமைத்திருக்கும் இந்த பாடலை, பாடலாசிரியர் விவேகா எழுதியிருக்கிறார். 

Image may contain: 1 person, beard | Anirudh ravichander, Famous singers,  Music

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் தயாராகும் இந்த ஆல்பத்திற்கு நடனப்புயல் பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார்.

Prabhu Deva gets married for the second time?

'3', 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஒன்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அனிருத்துடன் இணைந்து பணியாற்றும் இந்த இந்தப்பாடலின் காட்சித் துணுக்கு இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

dhanush: Chatting with Aishwarya Dhanush: Best life advice from dad  Rajinikanth; love for solitaires and rains - The Economic Times

பிரபல ஓடியோ நிறுவனமான டீ சீரீஸ் தயாரிப்பில் வெளியாகும் 'பயணி' என்ற வீடியோ இசை அல்பம், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் திறமையை பறைசாற்றும் என்பதால் அவருடைய ரசிகர்கள் பாடலின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right