இலங்கையில் ‘Hidromek’ வர்த்தக நாமத்தை அறிமுகம் செய்யும் உதேஷி ட்ரக்ஸ் அன்ட் இக்யுப்மன்ட்

Published By: Priyatharshan

15 Oct, 2016 | 12:58 PM
image

இலங்கையில் ‘Hidromek’ நிர்மாண சாதனங்களை உதேஷி ட்ரக்ஸ் அன்ட் இக்யுப்மன்ட் பிரைவட் லிமிட்டெட் (Utrax®) அறிமுகம் செய்துள்ளது.

இந்நிகழ்வு ஒக்டோபர் 14 ஆம் திகதி, கிரிபத்கொட பகுதியில் அமைந்துள்ள “உதேஷி சிட்டி” வளாகத்தில் நடைபெற்றது. இந்த அறிமுக நிகழ்வில், இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் டுன்கா ஒஸ்குஹாடர் பங்கேற்றிருந்தார்.

இந்த அறிமுக நிகழ்வில், துருக்கியின் முன்னணி நிர்மாண சாதன வர்த்தக நாமமான ‘Hidromek’, இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு காணப்படும் உயர் தரம் வாய்ந்த தெரிவாக அமைந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதை வென்ற அலங்காரத்துடன் நவீன தொழில்நுட்பங்களில் குறிப்பிடத்தக்களவு முதலீடுகளையும் கொண்டுள்ள ‘Hidromek’, துருக்கியின் உள்நாட்டு சந்தையில் துரித வளர்ச்சியை பதிவு செய்து சர்வதேச தரம் வாய்ந்த நிர்மாண சாதனமாக உயர்ந்துள்ளது.

உதேஷி குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுபுன் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,

“துருக்கியில் காணப்படும் தொழிற்பேட்டைகளில் உள்ள சகல வசதிகளையும் படைத்த தொழிற்சாலைகளில் இந்த சாதனங்கள் முழுமையாகப்பொருத்தப்படுகின்றன. இலங்கையில் தற்போது காணப்படும் இதுபோன்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில் சிறப்பாக செயலாற்றக்கூடியது.

இலங்கைச்சந்தையில் இவற்றை அறிமுகம் செய்வதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையில் காணப்படும் ஐரோப்பிய உற்பத்தியாக இது மட்டுமே காணப்படுகிறது. நிர்மாணத்துறையுடன் தொடர்புடைய நிறுவனம் எனும் வகையில் துறையின் தேவைகளை நாம் நன்குணர்ந்துள்ளோம். இந்த தேவைகளை நிவர்த்தி செய்ய சிறந்த தயாரிப்புகளை தெரிவு செய்துள்ளோம்.” என்றார்.

backhoe loaders, mini backhoe loaders, wheel excavators மற்றும் wheel loaders போன்றவற்றை நில அகழ்வு செயற்பாடுகள் மற்றும் வீதி நிர்மாண செயற்பாடுகளுக்காக ‘Hidromek’ தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான அங்கீகாரத்தை Utrax® கொண்டுள்ளது.

நிர்மாணத்துறையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள வளர்ச்சி என்பது இந்த புதிய தயாரிப்புகளை உள்நாட்டில் அறிமுகம் செய்வதற்கு நிறுவனத்துக்கு பிரதான உந்துசக்தியாக அமைந்திருந்தது. எதிர்வரும் காலத்தில் இதுபோன்ற மேலும் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யத்திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்த பெரேரா “துறையின் மீது முதலீட்டாளர்கள் பெரும் ரூடவ்டுபாட்டைக்கொண்டுள்ளனர். மேலும் பல திட்டங்களுக்கு உதவிகளை வழங்க நாம் தயாராகவுள்ளோம்.

இந்நிலையில் எம்மால் “‘Udeshi’ ஐ இதைவிட சிறந்த காலப்பகுதியில் அறிமுகம் செய்திருக்க முடியாது. எம்மீது நம்பிக்கை கொண்டு கைகோர்த்து முதலாவது பதிவை மேற்கொண்டுள்ள சன் கொன்ஸ்ட்ரக்ஷனுக்கு நாம் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.” என்றார்.

சன் கொன்ஸ்ட்ரக்ஷனின் ஒமார்தீன் அஸ்ஃபர் கருத்துத்தெரிவிக்கையில்,

“‘Udeshi’ உடனான எமது உறவு நீண்ட காலமாக பேணப்படுகிறது. எதிர்வரும் பல ஆண்டுகளுக்கும் இந்த உறவை தொடர்ந்து பேண நாம் எதிர்பார்த்துள்ளோம். ‘Hidromek’ போன்ற வர்த்தக நாமங்களை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதன் மூலமாக இலங்கையின் நிர்மாணத்துறைக்கு அவர்கள் அதிகளவு பெறுமதியை சேர்த்துள்ளனர்.” என்றார். 

‘Hidromek’ Inc ன் ஏற்றுமதி பிராந்திய முகாமையாளரான வசீம் ரஹீம் இந்நிகழ்வில் கருத்துத்தெரிவிக்கையில்,

“எமது தயாரிப்புகள் மீது நாம் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளோம். உயர் வினைத்திறன், சௌகரியம், நீடித்த பாவனை, குறைந்த பராமரிப்பு செலவீனம் கொண்ட தயாரிப்புகள் போன்றவற்றை பாவனையாளருக்கு வழங்குவது எனும் கொள்கைகளின் அடிப்படையில் எமது ஆய்வு செயற்பாடுகள் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன.

50 நாடுகளில் காணப்படும் வாடிக்கையாளர்கள் அவர்களின் நிர்மாணத்தேவைகளுக்காக எம்மை நாடுகின்றனர். இலங்கையிலும் நிர்மாணத்தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள Utrax® ஊடாக எமது தயாரிப்புகள் மீது வாடிக்கையாளர்கள் நாட்டம் காண்பிப்பார்கள் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.

உதேஷி ட்ரக் அன்ட் இக்யுப்மன்ட் பிரைவட் லிமிட்டெட் (Utrax®) என்பது 1986 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட உதேஷி குழுமத்தின் துணை நிறுவனமாகும். நிர்மாணப்பொருட்கள் மற்றும் வெடி பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் நோக்கத்துடன் உதேஷி டிரேடர்ஸ் நிறுவனத்தை தலைவர் எம்.ஜி.பெரேரா நிறுவியிருந்தார்.

காலப்போக்கில் நிர்மாணம் சொத்துக்கள் விருத்தி மற்றும் நிர்மாணத்துறைக்கான ஒப்பந்நத செயற்பாடு ஆகியவற்றை முன்னெடுக்க ஆரம்பித்தது. நிறுவனம் பின்னர் உதேஷி சிட்டி மற்றும் உதேஷி ட்ரக்ஸ் அன்ட் இக்யுப்மன்ட் என பன்முகப்படுத்தப்பட்டிருந்தது.

நிறுவனத்தின் உயர் முகாமைத்துவ நிலைகளில் பெரேரா குடும்பத்தின் அங்கத்தவர்கள் வழிகாட்டல்களை வழங்குகின்றனர். ஜப்பானின் Sumitomo, மலேசியாவின் Ultratrex போன்ற நிர்மாண வர்த்தக நாமங்களின் முகவராக Utrax® செயற்படுகிறது. கொன்ஸ்ட்ரக்ஷனுக்கு இலங்கையின் மாபெரும் ஹைட்ரோலிக் எக்ஸவேற்றர்கள் (35 Sumitomo Hydraulic Excavators) ஓடரை விநியோகித்த சாதனையையும் ருவசயஒ® தன்னகத்தே கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right