கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.நிவாஸ் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க நேற்று (11) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் கிண்ணியா நகர சபைக்கு விஜயம் செய்து தேவையான குறைபாடுகளை கேட்டறிந்துள்ளார்.
அத்தோடு, குறிஞ்சாக்கேணி பாலம் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டு கட்டட நிர்மானத்தை துரிதப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவாதம் வழங்கியதுடன், குறிப்பிட்ட படகு சேவையைப் பயன்படுத்துகின்ற பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகளும் தவிசாளரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது நகரசபையின் உறுப்பினர்களான எம்.எம். மஹ்தி, கலீபத்துள்ளா, ஆசாத், நசுருத்தீன் ஆகியோரும், சபையின் செயலாளர் விஷ்னு மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர்.
எதிர்காலத்தில் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பல வழிகளிலும் உதவி செய்து தருவதாக ஆளுநர் இதன் போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM