(இராஜதுரை ஹஷான்)

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு, வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு கையிருப்பு முகாமைத்துவ திட்டங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளதாக நிதியமைச்சின் நம்ப தகுந்த தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பிலான அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் மாதம் அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கத்தில் இரட்டை நிலைப்பாடு காணப்படுகிறது. 

அரங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உட்பட ஒருசில கட்சிகள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது அவசியம் என குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவிற்கு இலங்கையில் ஆதிக்கம் செலுத்த பல்வேறு உத்திகளை பிரயோகித்து வருவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படுவதில் தவறொன்றுமில்லை என்று குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடினால் தேசிய மட்டத்தில் அரசியல் மற்றும் சமூக ரீதியில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெறும். பொருளாதார நெருக்கயினை குறுகிய காலத்தில் சமாளித்துக்கொள்ளலாம்.

எதிர்வரும் வாரம் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தரவள்ளார்கள்.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்படும் நோக்கம் கிடையாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

இவ்வருடத்தில் மாத்திரம் வெளிநாட்டு பிணைமுறிகள் உட்பட 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு அரசமுறை கடன்களாக செலுத்தப்பட வேண்டும்.