(எம்.மனோசித்ரா)

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சகல தனியார் பாடசாலைகளிலும் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்குமாறு குறிப்பிட்டு கல்வி அமைச்சு புதிய சுற்றுநிரூபத்தை வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Virakesari.lk

பாடசாலைகளில் வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அவர்களை பாடசாலைக்கு அழைக்குமாறு இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்குமாறு அறிவிக்கின்றோம். எவ்வாறிருப்பினும் கொவிட் நிலைமைக்கு மத்தியில் பாடசாலைகளை நடத்துவதில் ஏதேனும் சிக்கல் நிலைமை காணப்பட்டால் வலய கல்வி பணிப்பாளரின் அனுமதியின் கீழ் அடு;த்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு குறித்த சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.