மருந்துகளின் விலைகளை தீர்மானிப்பது யார் ? - மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் தெளிவுபடுத்தல்

11 Mar, 2022 | 08:45 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் மருந்துகளின் விலைகள் தொடர்பான தீர்மானத்தை இறக்குமதியாளர்கள் மற்றும் மருந்தக உரிமையாளர்களால் மேற்கொள்ள முடியும் என்று வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் மருந்துகளின் விலைகளை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய மருந்தாக்கல் அதிகாரசபையின் விலை நிர்ணய குழுவிடமே' காணப்படுகிறது.

அதில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விலை நிர்ணய குழுவில் வெவ்வேறு  துறைகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் 13 நிபுணர்கள் உள்ளடங்குகின்றனர்.

மருந்து விலை நிர்ணய குழுவின் தலைவராக சிரேஷ்ட வைத்தியர் பாலித அபேகோனால் , டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றத்தினால் மருந்துகளின் விலைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் மருந்து விற்பனையாளர்களுக்கு அவர்களின் எண்ணத்திற்கமைய விலைகளை தீர்மானிப்பதற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என்று மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு...

2022-12-08 14:19:05
news-image

கொழும்பில் தீ விபத்து

2022-12-08 13:48:01
news-image

நாமலுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு

2022-12-08 13:37:40
news-image

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய...

2022-12-08 13:34:43
news-image

பசறையில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

2022-12-08 13:18:14
news-image

தனது தங்க நகையை கொள்ளையிட்டவர்களுடன் சூட்சுமமாக...

2022-12-08 13:06:52
news-image

கசினோ சட்டமூலத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி

2022-12-08 12:47:02
news-image

தென்கிழக்காசியாவின் 8 நாடுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்...

2022-12-08 12:15:02
news-image

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான எல்லை நிர்ணய அறிக்கை...

2022-12-08 12:08:58
news-image

வெல்லாவெளியில் யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு

2022-12-08 13:31:04
news-image

74 வயதான மனைவியை மண்வெட்டியால் தாக்கிக்...

2022-12-08 11:49:47
news-image

ஆபத்தான நோய்களினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் உயிரிழப்பது...

2022-12-08 11:45:27