ஊடக தணிக்கை அரசாங்கத்தின் கொள்கையல்ல ; டலஸ் அழகப்பெரும

Published By: Digital Desk 3

11 Mar, 2022 | 09:49 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஊடகத்தணிக்கை எமது அரசின் கொள்கையல்ல. மாறாக அவற்றை மேற்பார்வை செய்வதற்கான வழிமுறையையே முன்னெடுக்க இருக்கின்றோம், அத்துடன் வரலாற்றில் முதன்முறையாக பட்டய ஊடக கற்கைக்கான நிறுவனமொன்றை ஆரம்பிப்பதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 

செப்டம்பர் மாதமாகும் போது இந்த பட்டய ஊடக நிறுவனம் ஆரம்பிக்கப்படும் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே  போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை பத்திரிபை பேரவை சட்டத்தை திருத்த 2021 இல் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. பல்வேறு அமைச்சர்கள் இதனை மாற்ற முயற்சி செய்தார்கள். இதற்கான அடிப்படை செயற்பாடுகளை கயந்த கருணாதிலக்க மேற்கொண்டார். அமைச்சரவை முடிவிற்கு அமைய மக்கள் கருத்து பெறப்பட்டதோடு அதுதொடர்பில் ஆராய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

2002 இல் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றவியல் சட்டத்தை நீக்க எடுத்த முடிவு ஊடகத்துறையில் வரலாற்று முக்கியமான முடிவாகும். என்றாலும் ஊடக தணிக்கை என்பது எமது கொள்கை அல்ல என ஜனாதிபதி உள்ளிட்ட எமது அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. மாறாக காண்காணிப்பதற்கான கொள்கை ஒன்றை அமைப்பதே எமது கொள்கை.  

ஏனெனில் நானும் மிகவும் கஷ்டமான காலத்தில் பேனையை  பிடித்தவன்.  அதனால் தணிக்கை அன்றி மேற்பார்வை தான் எமது கொள்கையாகும். அதனால் இலங்கை பத்திரிகை பேரவைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டவரைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. ஊடக அமைப்புகளுடன் இணைந்து மேற்பார்வை செய்யக்கூடிய வழிமுறையையே மேற்கொள்ள இருக்கிறோம் என்றார்.

இதன்போது இடையீட்டு கேள்வி ஒன்றை முன்வைத்த கயந்த கருணாதிலக்க எம்.பி,

சுய தணிக்கை போக்கைத்தான் நாமும் பின்பற்றினோம். இலங்கை பத்திரிகை பேரவை நீண்டகாலமாக செயற்படுகிறது. ஊடக சுதந்திரத்திற்கு தடை போடும் இடமாகத் தான் ஊடக அமைப்புகள் இதனை கண்டனர் என்றார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும,

இலங்கை பத்திரிகை பேரவை அன்றி ஊடகப் பேரவை ஒன்றை கொண்டுவரவே யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் ஊடகப் பயிற்சி வழங்கும் இடமொன்று இது வரை கிடையாது.8 பல்கலைக்கழகங்களில்  ஊடக பாடநெறி உள்ளது. உயர்தரத்தில் பாடம் உள்ளது. 

ஆனால் அதற்கான தனியான நிறுவனம் கிடையாது. வரலாற்றில் முதன்முறையாக பட்டய ஊடக கற்கைக்கான நிறுவனமொன்றை ஆரம்பிக்க இருக்கிறோம். இதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதமாகும் போதும் இந்த பட்டய ஊடக நிறுவனம் உருவாக்கப்படும். 

பட்டய பொறியியலாளர் போன்று பட்டய ஊடகவியலாளர்கள் உருவாகுவார்கள். அவர்களுக்கு தொழில்சார் அறிவை வழங்க இருக்கிறோம். ஊடகங்கள் தனிநபர்களின் தனித்துவத்தை மீறாது எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து  ஆராயப்படுகிறது. பத்திரிகை ஆசிரியர் சங்கம் போன்ற பல அமைப்புகளுடன் இணைந்தே இது தொடர்பான தீர்மானங்களை எடுக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை...

2023-06-04 17:55:42
news-image

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது...

2023-06-04 17:20:57
news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02