நடிகர் கலையரசனின் 'குதிரைவால்' முன்னோட்டம் வெளியீடு

11 Mar, 2022 | 03:58 PM
image

இயக்குநரும், தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் தயாரிப்பில் கலையரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் 'குதிரைவால்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

kalaiarasan - Twitter Search / Twitter

இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷியாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் 'குதிரை வால்'. 

இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'காலா' பட புகழ் நடிகை அஞ்சலி பாட்டில் நடித்திருக்கிறார். 

Signed Kaala just to be part of a Rajini film: Anjali Patil- Cinema express

இவர்களுடன் ஆனந்த் சாமி, சௌமியா ஜெகன், மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்திருக்கிறார். 

பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் 'குதிரைவால்' திரைப்படம் எதிர்வரும் 18 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.

Kaala Director Pa Ranjith's stunning new boxing avatar is going viral

ஃபேண்டசி மற்றும் சர்ரியலிச பாணியில்  இதன் திரைக்கதை வித்தியாசமாக அமைக்கப்பட்டிருப்பதால், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸருக்கு இணையவாசிகளிடையே பெரும் ஆதரவு கிடைத்தது.

இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது, இதில் நாயகன் ஓர் இரவில் உறங்கி, காலையில் எழுந்திருக்கும் பொழுது அவரது பின்பகுதியில் குதிரையின் வால் ஒன்று தோன்றுகிறது. 

Kuthiraivaal Movie (2022): Cast | Trailer | Songs | Release Date - News Bugz

இதனால் ஏற்படும் அதிரடி திருப்பங்கள் தான் படத்தின் மையப் புள்ளி என்பதால் முன்னோட்டத்திற்கு எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35