தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்கவேண்டும்." - எஸ்.பி. திஸாநாயக்க 

Published By: Digital Desk 4

11 Mar, 2022 | 03:04 PM
image

" தேசிய அரசு என்பதற்கு அப்பால், தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்க வேண்டும்." - என்று கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். 

நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலக சந்தையில் இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. கொள்கலன்களுக்கான போக்குவரத்துக் கட்டணமும் அதிகரித்துள்ளது. இவற்றின் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிக்கின்றது. பெரும் நஷ்டத்துக்கு மத்தியிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது. நஷ்டத்தை அரசு தாங்கிவருகின்றது. இவ்வாறான நெருக்கடி நிலையில் இருந்து  கட்டங்கட்டமாகவே மீள வேண்டும்.  

இன்னும் ஒரு வாரத்துக்குள் மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடி தீரும். ஆடைக் கைத்தொழில்மூலம் வருமானம் வரத்  தொடங்கியுள்ளது. சுற்றுலாத்துறையும் எழுச்சி கண்டுவருகின்றது. வெளிநாடுகளில் தொழில் புரிபவர்கள் பணம் அனுப்புகின்றனர்.

இது நெருக்கடியான கால கட்டம், எனவே, தேசிய அரசு என்பதற்கு அப்பால் எதிரணிகள் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க வேண்டும். பிரிட்டன் போன்ற நாடுகளில் அவ்வாறு நடக்கின்றன. பிற நாடுகளில் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது. ஆனால் நாம் அவ்வாறு செய்யவில்லை. எனவே ,நெருக்கடி நிலைமையை நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும். 

நாட்டின் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நல்லாட்சி அரசும் பொறுப்புக்கூறவேண்டும்."  என எஸ்.பி. திஸாநாயக்க. தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52