இந்தியப் பெருங்கடல் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் : கொழும்பு மாநாட்டில் அஜித் தோவல்

12 Mar, 2022 | 01:34 PM
image

கடல்சார் பயங்கரவாதம் உள்ளிட்ட பகிரப்பட்ட பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் அண்டை நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த  வேண்டும் என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தினார்.

மாலைதீவில் இடம்பெற்ற  5 ஆவது கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில்  கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அஜித் தோவல் இதனைத் தெரிவித்தார். 

புதன்கிமை ஆரம்பிக்கப்பட்டு இரு நாட்களாக இடம்பெற்ற இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை, மாலைதீவு, மொரிஷியஸ், பங்களதேஷ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பகிரப்பட்ட பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள கடல்சார் அண்டை நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த  வேண்டும் என  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தினார்.

மாநாட்டில் உரையாற்றிய மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா தீதி கூறுகையில், போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல், கடற்கொள்ளையர்,  பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் வன்முறை தீவிரவாதம் போன்ற மாலைத்தீவு எதிர்கொள்ளும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை எடுத்துரைத்ததோடு ரஷ்யா-உக்ரைன் மோதலின் தாக்கங்களையும் குறிப்பிட்டார்.

உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை 4 ஆக உயர்த்தப்பட்டதுடன் பார்வையாளர் நாடுகள் விரைவில் மாநாட்டில் சேரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பங்களாதேஷ் மற்றும் சீஷெல்ஸ் ஆகியவை பார்வையாளர் நாடுகளாகும்.

கடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, மனித கடத்தல், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணைய பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு தூண்களான பாதுகாப்பு ஒத்துழைப்புடன் இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையே ஒரு முத்தரப்பு பாதுகாப்பு கட்டமைப்பாக கொழும்பு பாதுகாப்பு மாநாடு நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பில்லாமல் ஜனாதிபதி தேர்தலில்...

2023-05-28 18:00:50
news-image

பௌத்த மதத்தை அவமதித்து விட்டு மன்னிப்பு...

2023-05-28 17:54:11
news-image

க.பொ. த. சாதாரண தர பரீட்சை...

2023-05-28 17:57:56
news-image

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள...

2023-05-29 06:30:17
news-image

ஜனாதிபதியை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்ட...

2023-05-29 06:21:46
news-image

மதங்களை அகெளரவப்படுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்...

2023-05-28 17:52:17
news-image

30 ஆம் திகதி நள்ளிரவு முதல்...

2023-05-28 17:51:09
news-image

மதங்களை அவமதிப்பவர்களுக்கு எதிராக ஐ.சி.சி.சி.பி.ஆர்.சட்டத்தின் கீழ்...

2023-05-28 16:44:46
news-image

ஜூன் 8 ம் திகதி முதல்...

2023-05-28 20:19:50
news-image

வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை...

2023-05-28 17:49:28
news-image

மிக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல...

2023-05-28 17:48:27
news-image

வடக்கு, கிழக்கில் பரவிய தோல் கழலை...

2023-05-28 18:34:12