பாணின் விலை அதிகரிப்பு

By T Yuwaraj

11 Mar, 2022 | 01:08 PM
image

கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளது.

பாணின் விலையை குறைக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இணக்கம்!

இதனடிப்படையில் பாண் ஒன்றின் விலை 20 முதல் 30  ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. 

இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, கோதுமை மா விநியோகஸ்தர்களான செரண்டிப் நிறுவனமும், பிறிமா நிறுவனமும் கோதுமை மாவின் விலைகளை உயர்த்துவதாக அறிவித்தன.

இந்நிலையில், ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில்,  ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிறிமா நிறுவனமும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்த விலை உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருவதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையிலேயே பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right