யாழில் ஓடுகளை திருடி விற்பனை செய்து வந்த நபரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மின்னம்பலம்:கஜா தந்த தரிசனம்!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 30 வயதான சந்தேகநபர் நகர்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து ஓடுகளை திருடி விற்பனை செய்துவந்த. நிலையிலேயே குறித்த நபர் யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியபோதே நீதவான் விளக்கமறியல் வைக்க உத்தரவிட்டார்.