ஐந்து தசாப்தங்களின் பின்னர் மாலைதீவிலிருந்து கொழும்பு இரத்மலானை விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி தொடக்கம் இந்த விமான சேவை இடம்பெறும்.

அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக இரத்மலானை விமான நிலையம் இந்தியா மற்றும் மாலைதீவை கேந்திரமாகக் கொண்டு பிராந்திய சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 1938 இல் அமைக்கப்பட்டது.

1968 இல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதால், பிராந்திய மற்றும் சர்வதேச விமானங்கள் செயல்படவில்லை

நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.