புத்தூர் பகுதியை சேர்ந்த 59 வயதான குகபிரகாசம் மற்றும் அவரது மனைவியான 55 வயதான சுகுணா  ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

வீட்டில் உள்ள நீர் தொட்டியில் மனைவி நீர் அள்ளும் போது மின்சாரம் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற முயன்ற வேளை கணவனும் மின்சார தாக்குதலுக்கு இலக்காகியதில் உயிரிழந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.