சூரியவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரியவெவ - எம்பிலிபிடிய பிரதான வீதியில் , சூரியவெவவிலிருந்து எம்பிலிபிடிய நோக்கி பயணித்துகொண்டிருந்த மோட்டார்சைக்கிள் வீரியகம பகுதியில் வேகக்கட்டுபாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது காயமடைந்த மோட்டார்சைக்கிள் செலுத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 35 வயதுடைய எம்பிலிபிடிய பகுதியை சேர்ந்த சூரியவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகராவார்.

சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.