(எம்.மனோசித்ரா)
காலவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கும் , ஒரு வருட காலத்திற்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்கும் இலங்கை போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து மோட்டார் வாகன திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் கொவிட் தொற்று நிலைமையின் காரணமாக போக்குவரத்து திணைக்களம் மூடப்பட்டிருந்தமையின் காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் காhவதியாகும் திகதி பல சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதிகளவான சாரதி அனுமதி பத்திரங்களை ஒரே நேரத்தில் புதுப்பிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.
எனவே குறிப்பிட்ட காலங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் உரித்தாகும் கால எல்லையை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் கால அவகாசம் அடுத்த 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று ஜூலை முதலாம் திகதி முதல் செப்டெம்பர் 30 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் காலவதியாகும் சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் அடுத்த 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் காணப்படும் டொலர் நெருக்கடியின் காரணமாக சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளை இறக்குமதி செய்வதிலும் நெருக்கடி நிலைமையே காணப்படுகிறது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தற்காலிகமாக ஒருவருடத்திற்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ள சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நெருக்கடி நிலைமை வழமைக்கு திரும்பிய பின்னர் சாரதி அனுமதி அட்டைகளை அவரவர் வீடுகளுக்கே விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM