உயர் தொழில்நுட்ப நடவடிக்கைகள் ஊடாக யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னேற்றம்

By T Yuwaraj

10 Mar, 2022 | 04:37 PM
image

தொடர்ச்சியான உயர் தொழில்நுட்ப நடவடிக்கைகளினூடாக, யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதித் துறையில் முன்னிலையில் திகழ்கின்றது.

நாட்டின் காப்புறுதித் துறைக்கு பின்தொடர்வதற்கான மட்டக்குறியீடாக அமைந்துள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றுக்கிடையே ஒன்றிணைந்த செயற்பாட்டின் அடிப்படையில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

சிறந்த தொழில்நுட்ப சேவை வழங்குநர்களுடனும், வளர்ந்து வரும் ஆரம்பநிலை நிறுவனங்களுடனும் கைகோர்த்து, தமது டிஜிட்டல் ஆற்றல்களை மேம்படுத்த முடிந்துள்ளது. டிஜிட்டல் புத்தாக்கத்தினூடாக துறையில் முன்னிலை வகிக்க எமக்கு உதவியுள்ளது.” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

தமது திறந்த புத்தாக்க தந்திரோபாயத்தினூடாக, இரு முன்னணி தீர்வுகளான Clicklife டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் அடுத்த தலைமுறை காப்புறுதி வழங்கல் தொழில்நுட்பம் ஆகியவற்றை முன்னெடுக்க முடிந்துள்ளது.

பாரம்பரிய ஆயுள் காப்புறுதியை மாற்றியமைப்பதில் Clicklife டிஜிட்டல் கட்டமைப்பு என்பது பரந்த டிஜிட்டல் நோக்கத் திட்டமாக அமைந்துள்ளதுடன், காப்புறுதித் தீர்வுகளை உள்வாங்குவது, காப்புறுதி சேவை வழங்கலை டிஜிட்டல் மயப்படுத்துவது மற்றும் உரிமைகோரல்கள் தொடர்பான தொடர்பாடல்களை பேணுவது போன்றவற்றினூடாக பரிபூரண சுகாதார மற்றும் வாழ்க்கைமுறை கட்டமைப்பை உருவாக்கிக் கொடுக்க முடிந்துள்ளது.” என்றார்.

சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பரிபூரண app ஆக அமைந்துள்ள Clicklife இனால், இலங்கையில் ஆயுள் காப்புறுதி சேவை வழங்கல் புரட்சிக்குட்படுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு தமது மொபைல் தொலைபேசிகளினூடாக காப்புறுதிகளை நிர்வகிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரவுகளை கையகப்படுத்தக்கூடிய புதிய வழிமுறைகளை இணைந்து உருவாக்குவதற்காக ஆரம்பநிலை நிறுவனங்களை யூனியன் அஷ்யூரன்ஸ் அழைத்துள்ளது. அதனூடாக மேம்படுத்தப்பட்ட பகுப்பாய்வு மாதிரிகளை உருவாக்கி, அடுத்த தலைமுறை காப்புறுதி வழங்கல் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

ஜுட் கோம்ஸ் தெரிவிக்கையில்,

“தற்போது வடிவமைக்கப்படும் அடுத்த தலைமுறை காப்புறுதி வழங்கல் தொழில்நுட்பம் என்பது நிறுவனத்தின் ஒன்றிணைக்கப்பட்ட பிரதான டிஜிட்டல் செயற்படுத்தல் மாதிரியாக அமைந்திருக்கும். அசல் நேர செயற்படுத்தல் மற்றும் AI செயற்படுத்தப்பட்ட ஆயுள் காப்புறுதி வழங்கல்கள் மூலமாக இடர்களை ஆழமாக கண்டறிய முடிவதுடன், அதன் பிரகாரம் மதிநுட்பமாக உடனடி காப்புறுதித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதான தகவல் அதிகாரி ஹர்ஷ சேனாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “புதிய தொழில்நுட்பங்களுக்கு காப்புறுதித் துறை துரிதமாக பழக்கப்படுத்திக் கொள்வதனூடாக வெற்றிகரமாக இயங்கக்கூடியதாக இருக்கும்.

இலங்கையின் காப்புறுதித் துறையில் முன்னோடி எனும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளையும் நிபுணத்துவத்தையும் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தொடர்ச்சியாக எம்மை மேம்படுத்திக் கொள்வோம்.” என்றார்.

நிதியியல் தொழில்நுட்பம் (fintech) மற்றும் சுகாதாரதொழில்நுட்பம் (healthtech) ஆகியவற்றை ஒன்றிணைத்து புதிய வழிமுறையை அறிமுகம் செய்ய யூனியன் அஷ்யூரன்ஸ் எதிர்பார்க்கின்றது. இதனூடாக, இலங்கையில் நிலவும் பாதுகாப்பு இடைவெளியை நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.

Clicklife இனுள் சுகாதார மற்றும் செல்வம் தொடர்பான உள்ளம்சங்களை உள்வாங்குவதற்கும், காப்புறுதித் தீர்வுகளை விநியோகிக்கும் புதிய வழிமுறைகளை இனங்காண்பதற்கும் ஆரம்பநிலை நிறுவனங்களை அழைத்துள்ளது.

சிறந்த, அதிகளவு வினைத்திறனான காப்புறுதித் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் தீர்மானத்தை மேற்கொள்வதில் தரமான தரவுகளின் கிடைப்பனவு என்பது அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது என நிறுவனத்தின் மூலங்கள் தெரிவித்துள்ளன. வாடிக்கையாளர்கள் பொருத்தமான ஆயுள் காப்புறுதி சுகாதார காப்புறுதித் தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளை மீளமைக்க வேண்டும். என அவர்கள் குறிப்பிட்டனர்.

2025 ஆம் ஆண்டளவில், உலகளாவிய ரீதியில் சுகாதார தொழில்நுட்பம் சார்ந்த  அணியக்கூடிய இணைப்புகளுடனான சாதனங்கள் பல பில்லியன் கணக்கில் காணப்படுகின்றன. காப்புறுதிதாரர்களுக்கு வாடிக்கையாளர்களை பற்றி ஆழமான புரிதலை ஏற்படுத்திக் கொள்வதற்கு அவசியமான புதிய தரவுகளை இது ஏற்படுத்தும். அதனூடாக, பல புதிய தீர்வுகள், அதிகளவு பிரத்தியேகமான விலையிடல் மற்றும் அசல் நேர உடனுக்குடனான சேவை வழங்கல் போன்றன ஏற்படுத்தப்படும்.

கொவிட் தொற்றுப் பரவலுக்கு பின்னரான உலகில், நிதி நிறுவனங்கள் மற்றும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் மத்தியில் நெருக்கமான தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. “எதிர்வரும் காலம் விறுவிறுப்பானதாக அமைந்திருக்கும்.

திறந்த புத்தாக்கம் என்பதற்கு ஆதரவளிக்க யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், இலங்கையில் முன்னேற்றகரமான நிதித்தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குவதில் பங்களிப்பு வழங்க முன்வந்துள்ளது.” என நிறுவனம் அறிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் ஜோன் கீல்ஸ் குழுமத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட, ஆரம்பநிலை துரிதப்படுத்தல் நிறுவனமும் திறந்த புத்தாக்கமான நிகழ்ச்சித்திட்டமாகவும் அமைந்துள்ள John Keells X (JKX) இனால், யூனியன் அஷ்யூரன்ஸை முன்னிலையில் திகழச் செய்வதற்கு முக்கிய பங்களிப்பு வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தினூடாக இலங்கையின் ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு புதிய காப்புறுதித் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்படும். ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு திறந்த புத்தாக்கத்தினூடாக ஊக்கமளிப்பதை JKX இலக்கு வைத்துள்ளது. 

வெற்றிகரமான நிறுவனங்களாக வளர்ச்சியடைவதற்கு அவசியமான நிதியைப் பெறல், பயிற்சிகளைப் பெறல் மற்றும் சரியான இணைப்புகளை ஏற்படுத்தல் போன்றவற்றுக்கு உதவிகளை வழங்கியுள்ளது.

Accelerate, Innovate மற்றும் Elevate எனும் மூன்று பிரிவுகளில் வளர்ச்சியடைந்துள்ளது. ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை வழங்கி, அவற்றுக்கு புதிய தொழில்நுட்பங்களை வடிவமைப்பதற்கு ஆதரவளிப்பதுடன், அதனூடாக காப்புறுதி போன்ற துறைகளுக்கு பயன் பெறக்கூடியதாக இருக்கும்.

JKX தந்திரோபாயத்தின் கீழ், ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் அடங்கிய பரந்தளவு JKH கட்டமைப்பின் அனுகூலத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். திறந்த புத்தாக்கத்தை சர்வதேச மட்டத்தில் கட்டியெழுப்பும் கட்டமைப்பொன்றை உருவாக்குவது இலக்காக அமைந்துள்ளது.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது.

துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 17.3 பில்லியனைக் கொண்டுள்ளது.

 ஆயுள் நிதியமாக ரூ. 49.8 பில்லியனையும், 2021 டிசம்பர் மாதமளவில் மூலதன போதுமை விகிதமாக (CAR) 228% ஐக் கொண்டிருந்தது.

இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. 

நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், மாற்றமடைந்து வரும் ஆயுள் காப்புறுதித் துறையில் கவனம் செலுத்துகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மென்மையான மற்றும் மகிழ்வூட்டும் சருமத்திற்கு வெல்வெட்...

2022-12-07 12:44:34
news-image

Elegance, Excelsior ஆகிய இரு விசேட...

2022-12-05 14:38:29
news-image

60 ஆவது ஆண்டில் Vogue Jewellers

2022-12-02 17:28:58
news-image

MARLBO வருட இறுதி மலிவு விற்பனை

2022-11-28 17:14:01
news-image

சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்களோடு வர்த்தக ஊக்குவிப்பு...

2022-11-25 11:42:45
news-image

சர்வதேசத்தை ஈர்த்த லின்க் நெசுரல் Race...

2022-11-23 09:58:58
news-image

பிராந்திய கடன் பிரிவுகளுக்கான மக்கள் வங்கியின்...

2022-11-22 15:25:50
news-image

22 ஆவது வருடாந்த பொருளாதார உச்சி...

2022-11-22 14:44:38
news-image

விவசாயக் குடும்பங்களின் அடுத்த தலைமுறையை ஊக்குவாக்கும்...

2022-11-21 21:14:46
news-image

10 ஆவது ஆண்டு நிறைவு விழாவைக்...

2022-11-21 16:07:24
news-image

பொது சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தொலைத்தொடர்பு தீர்வுகளை...

2022-11-18 16:19:40
news-image

 ‘செவ் தேசடம டயலொக்’ டயகமவில் புதிய...

2022-11-11 09:45:26