பாகிஸ்தானில் ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை சுட்டுக்கொன்ற தந்தை 

By T Yuwaraj

10 Mar, 2022 | 04:06 PM
image

பாகிஸ்தானின் மியான்வாலி நகரில் ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு பிறந்து  ஏழு நாட்களே ஆன தனது மகளைக் தந்தை ஒருவர் கொலை செய்துள்ளதாக  உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

man murder baby daughter

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் வசித்து வரும் ஷாஜாய்ப் கான் என்பவருக்கு முதலில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இதனையடுத்து, சமீபத்தில் அவருக்கு 2 ஆவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்த அவருக்கு மீண்டும் பெண் குழந்தையே பிறந்தமையால் அவர் ஆத்திரமடைந்துள்ளார்.

இந்நிலையில், பிறந்து 7 நாட்களேயான தனது பெண் குழந்தையை கொடூரமாக 5 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right