தென் கொரிய ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் சக்தி கட்சி மயிரிழையில் வெற்றி பெற்றுள்ளது.
தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற நிலையில், தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங்குக்கும் மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த யூன் சுக்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
ஜனாதிபதித் தேர்தலில் மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.
தேர்தலில் சுமார் 4 கோடியே 40 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர், தேர்தல் தினத்தன்று காலை 6 மணியளவில் வாக்குப்பதிவு ஆரம்பமாகியது.
வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து கொவிட் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
வாக்குப்பதிவு நிறைவடைந்தது வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகியது.
இந்நிலையில், மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த யூன் சுக் 48.59 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடும் போட்டியாக விளங்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங் 47.80 சதவீதம் வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM