(இராஜதுரை ஹஷான்)
சர்வ கட்சி மாநாட்டை நடத்தி தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மேற்குலக நாடுகள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கிறது.
அரசாங்கம் கொள்கைக்கு முரணாக செயற்படுகிறது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடக பேச்சாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தினால் நடைமுறையில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. எரிபொருள் விநியோகம், மின்சார விநியோகம் ஆகிய அடிப்படை சேவைகளில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு கொவிட் பெருந்தொற்று பரவல் காரணம் என அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சர்வக்கட்சி மாநாட்டை நடத்தி தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. நடைமுறையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொருளாதார கொள்கைகள் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலகாரணியாக அமைந்துள்ளது.
நாட்டில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்குலக நாடுகள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கிறது.
திருகோணமலை எண்ணெய் தாங்களில் தனியுரிமையினை பெற்றுக் கொள்வே இந்தியா எரிபொருள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக இலங்கைக்கு உதவு செய்கிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கினோம். அரசாங்கம் கொள்கைக்கு முரணாக செயற்படுவதால் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக நாளாந்தம் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள். அரசாங்கதத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்திற்குள் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் யோசனைகளுக்கும், சிவில் அமைப்புக்களின் யோசனைகளுக்கும் அரசாங்கம் அவதானம் செலுத்துவதில்லை. தான்தோன்றித்தனமாக செயற்படுவதால் சமூக மட்டத்தில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM