மஞ்சள் கடவையில் வீதியை கடந்த தாய் மற்றும் மகள் மீது வீதியில் பயணித்த பஸ் மோதியதில் தாய் உயிரிழந்துள்ளதோடு மகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் காலி வீதியில் மிலகிரிய ஆலயத்திற்கு அருகாமையில் கடந்த ஒக்டோம்பர் மாதம் 1 ஆம் திகதி இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தில் 46 வயதுடைய தாய் உயிரிழந்துள்ளதுடன் 18 வயது நிரம்பிய மாணவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் சிக்குண்டவர்கள் வரக்காப்பொல பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும், குறித்த மாணவி கொழும்பு.தேவி பாலிக்கா வித்தியாலத்தில் கல்வி கற்கின்றமையால் பம்பலப்பிட்டியவில் வசித்து வந்துள்ளமையும் பொலிஸார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி மேல் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.