2023ஆம் ஆண்டு முதல் கடமைகளை ஆரம்பிக்க  நியூ போர்ட் எனர்ஜி நிறுவனம் தீர்மானம்

Published By: Digital Desk 4

10 Mar, 2022 | 01:48 PM
image

(இராஜதுரை ஹஷான்)

திட்டமிட்டதைப் போன்று 2023ஆம் ஆண்டு முதல் நியூ போர்ட்ஸ் எனர்ஜி நிறுவனம் தனது கடமைகளை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளது. இத்திட்டத்தின் ஊடாக தினசரி 1.2 மில்லியன் திரவ இயற்கை எரிவாயுவை விநியோகிக்க முடியும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனத்துடன் கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம்  கைச்சாத்து - நிதி அமைச்சு அறிவிப்பு | Virakesari.lk

கெரவலபிடிய மின்நிலையத்தின் பங்குகளில் 50 சதவீத பங்குகள் திறைச்சேரியிடமும்,27 சதவீதம் ஊழியர் சேமலாப நிதியத்திடமும்,18சதவீதம் லெகோ நிறுவனத்திடமும்,5 சதவீதம் எல்.டி.எல் ஹோல்டிங் நிறுவனத்திடமும் பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

இவற்றில் திறைச்சேரி வசமுள்ள 50சதவீத பங்குகளில் 40சதவீத பங்குகளை அமெரிக்காவின் நிய்வ் போர்ட் எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் 2021.09.17ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை நிதியமைச்சு பகிரங்கப்படுத்தாத காரணத்தினால் அரசியல் கட்சிகள் உட்பட சிவில் அமைப்பினர் தகவலறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம் ஒப்பந்தத்தை பெற்றுக் கொள்ள முயற்சித்தனர்.தகவறியும் சட்டத்தின் ஊடாக விண்ணப்பித்த விண்ணப்பங்களை நிதியமைச்சு நிராகரித்தது.

கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை செல்லுப்படியாக்குமாறு உயர்நீதிமன்றில் 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.குறித்த மனுக்களை ஆராய்ததன் பின்னர் உயர்நீதிமன்றம் அம்மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் கடந்த 4ஆம் திகதி தள்ளுப்படி செய்தது.

உயர்நீதிமன்றின் தீர்மானத்தை தொடர்ந்து நியூ போர்ட் நிறுவனம் தாம் திட்டமிட்டதற்கமைய இயற்கை எரிவாயு விநியோக நடவடிக்கையினை எதிர்வரும் ஆண்டு முதல் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த முனையத்தை கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதனூடாக ஒரு நாளைக்கு 1.2 மில்லியன் இயற்கை எரிவாயுவை விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனால் தினசரி கெரவலபிடிய யுகதனவி மின்நிலையத்தின் ஊடாக 310 மெகாவாட் மின்சாரத்தையும்,சொபாதனவி மின்நிலையத்தின் ஊடாக 350 மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும் என நியூ போர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08