(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அரசியல் சூழ்ச்சியை ஆரம்பித்து விட்டது என்பதை நன்கு உணர முடிகிறது. முழு நாடும் சரியான பாதைக்கு என்ற மாநாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோருடன் ஒன்றிணைந்திருந்த சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன விமல், கம்மன்பிலவின் அமைச்சு பதவிகள் பறிபோனதன் பின்னர் தனித்து செல்வதை காண முடிகிறது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு விமல், கம்மன்பில ஆகியோர் முன்னின்று செயற்பட்டார்கள். நெருக்கடியான சூழ்நிலைமையின் மத்தியில் தான் ஜனாதிபதி அவர்களை பதவி நீக்கினார் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்களின் செயற்பாடு மீது முழுமையாக நம்பிக்கை கொள்ளமுடியாது. எந்நிலையிலும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்துவார்கள் என்பதை ஆரம்பத்திலிருந்து குறிப்பிட்டு வருகிறேன்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களிலும்,பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைய வேண்டிய தேவை பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது. அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM