நாட்டில் எரிவாயு சிலிண்டருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், எரிவாயு சிலிண்டர் கொள்வனவுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கின்றனர்.
இந்நிலையில், நுவரெலியா மற்றும் நானுஒயாவில் அதிகாலை ஐந்து மணி முதல் வரிசையில் காத்திருந்தும் கூட ஒரு சிலரால் எரிவாயுவினைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போயுள்ளது.
அத்துடன், ஒரு சிலர் தமது பிரதேசங்களைத் தவிர்த்து மிக நீண்ட தூரம் பயணம் செய்தும் அதிக செலவு செய்து சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்கின்றனர்.
இதேவேளை சில உணவகங்கள் எரிவாயு தட்டுப்பாடு காரணத்தினால் மூடப்பட்டுள்ளது.
சகல விடயங்களுக்கும் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது. இரண்டு மூன்று நாட்களாக வந்துசெல்கின்றோம். ஆனால் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப உள்ளது.
எரிவாயு சிலிண்டர் இல்லை, உண்பதற்கு உணவு இல்லை. ஒரு பக்கம் எரிபொருளுக்கான நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. நீண்டவரிசையில் காத்திருந்தும் எரிவாயு சிலிண்டர் கிடைக்குமா என்பது சந்தேகமே என நுகர்வோர் தெரிவித்தனர்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM