“ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது நானே, என கடிதம் எழுதிவைத்தவிட்டு முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரியொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கேகாலை கரடுபன - தெஹிபிடிய பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

மேலும் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரியான மலிந்த உதலாகமவை விடுதலை செய்யுமாறும், இந்த கடிதத்தை புலனாய்வு பிரிவினருக்கு ஒப்படைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.